தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதார விலையினை வழங்க தமிழக அரசு 252 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2021-2022 ஆம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கரும்பு விவாசாயிகளுக்கான நிலுவை தொகை அனைத்து ஆலைகளிலும் வைக்கப்பட்டுள்ளதால், மறுதாம்பு கரும்பு சாகுபடி செய்ய முடியாமலும், கரும்புக்கான கடன் வாங்கமுடியாமலும் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.