ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரக்ஷாபந்தன் தினத்தன்று தனது சகோதரருக்கு ராக்கி கட்டுவதற்காக தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தையும், கணவரும் உறங்கி கொண்டிருந்ததால் அவர் சொல்லாமல் சென்றுள்ளார்.
அப்போது தூக்கத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த தந்தை குழந்தையை அடித்துள்ளார். அப்படியும் விடாமல் அழுததால், அருகிலிருந்த தலையணையை எடுத்து அழுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது. வெளியே சென்றிருந்த ப்ரியா, அங்கே வந்து பார்த்தபோது, குழந்தை இறந்திருந்த்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.