Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…! பானையை தொட்டத்தால்…. மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்…. இந்த நிலை மாறாதா

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் பகுதியை அடுத்துள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்த சிறுவன், அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திர மேக்வல் தனக்கு தாகமாக இருப்பதாக கூறி வகுப்பறையில் இருந்த பானையில் தண்ணீர் எடுத்து குடிக்க முயன்றுள்ளார்.

இதனை கண்ட அப்பள்ளியின் ஆசிரியர் ஷாயில் சிங்(40) அந்த மாணவனை பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் பானையை தொடலாமா என்று கடுமையாக தாக்கியுள்ளார். ஆசிரியர் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆசிரியரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |