நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு இரண்டாவது ஆண்டாக சென்னை செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு பேசிய அவர், விடுதலைப் போராட்ட வீரர் மலையாள வெங்கடுப்பதி எத்தலபருக்கு 2.5கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில் சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியர்களுக்கான அகலவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்கின்றது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.