Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கடற்படையில் இலங்கை இணையப்போகிறதா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

போர் பயிற்சி தொடர்பாக பரவிய தகவல்களுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலான யுவான்‌ வாங்-5 நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ் தைமூர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சீனாவில் கட்டப்பட்டது.

இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டின் போர்க்கப்பலும் இலங்கை அரசும் சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் பாகிஸ்தான் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் கடற்படையில் இலங்கை இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |