Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் திட்டம்….. இனி இதன் மூலம் ஈஸியா பணம் செலுத்தலாம்….. சூப்பர் வசதி அறிமுகம்….!!!!!

பென்ஷன் பயனாளிகள் இனி யுபிஐ மூலமாக எளிதில் பங்களிப்புத் தொகையை செலுத்தலாம் என்று பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் PFRDA தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆடல் பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டு பென்ஷன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகள் நெட் பேங்கிங் போன்ற வழிமுறைகளில் பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறார்கள்.

இருந்தாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் தான் மிகவும் எளிதானதாக தற்போது கருதப்படுகிறது. அதனால் பலரும் யுபியை பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே பென்ஷன் திட்டங்களில் யுபிஐ வழியாக பங்களிப்பு தொகை செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களிலும் யுபியை வழியாக பங்களிப்பு தொகை செலுத்தலாம் என்று பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கான UPI ID PFRDA.15digitVirtualAccount@axisbank என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |