Categories
மாநில செய்திகள்

ரயில் பணிகள் கவனத்திற்கு…. இதற்கு மட்டும் தடை… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் கட்டணமும் குறைவான நேரம் என்பதால் ஏழை எளிய மக்கள் ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஐஆர்சிடிசி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து பயணிகளின் தங்களின் குறைகளை தெரிவிக்க ஹெல்ப் லைன் என் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் ரயில் நிலைய தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அதுமட்டுமில்லாமல் தற்போது உணவுகளை வாங்கும் போது க்யூ ஆர் கோடுமூலம் பணம் செலுத்தும் வசதியே ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தொடர் மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் புது டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமாக சேலம் ரயில் நிலையத்திலிருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை போன்றவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றை அனுப்ப இன்று வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பிறகு ரயில்களில் ஏற்றப்படுகிறது.

Categories

Tech |