சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான்பட்டரை பகுதியில் அப்துல்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்துல்கனி அதே பகுதியில் வசிக்கும் 1-ஆம் வகுப்பு சிறுமியை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின் மதுபோதையில் இருந்த அப்துல்கனி சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அப்துல்கனியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்துல்கனிக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் அவரை காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காட்பாடி காவல்துறையினர் அப்துல்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.