திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு பேருந்து தருவை உள்ள தனியார் கல்லூரியின் அருகே வரும் பொழுது செங்கல் ஏற்றி வந்த லாரியும் அரசு பேருந்தும் மோதிக்கொள்ள விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பாதுகாப்பாக சாலையில் இருந்து விளக்கியதால் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளனர். இந்த விபத்தினால் சுமார் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
லாரி ஓட்டுனருக்கு மட்டும் காயம் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.