ராஜஸ்தான் மாநிலம் முன்னாள் பாஜக எம்எல்ஏ அமிர்தா மேக்வால். இவர் ஞாயிறு இரவு அஜ்மிரிலிருந்து ஜலோருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நரேலி புழியா அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது அதனை நிறுத்திய மர்மநாபர்கள் அமிர்தாவை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் காரின் கண்ணாடியை அவர்கள் அடைத்து உடைத்து உள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து ஆழ்வார் கேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.