நண்பருடன் காரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த வாலிபர்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வீரபட்டியை சேர்ந்தவர் அழகியசோழன் இவர் தனது நண்பன் சுதந்திரனை அழைத்துக்கொண்டு நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை வரை காரில் சென்றுள்ளார். பின்னர் அவர்களது வீரப்பட்டிக்கு இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர் அழகியசோழனும் அவரது நண்பரும். காரை அழகியசோழன் ஓட்டி வந்துள்ள நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்துள்ளது.
இதில் சுதந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அழகியசோழன் காயங்களுடன் ஆலங்குடி காவல்துறையினர் உதவியால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுதந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து புகாரின் அடிப்படையில் ஆலங்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.