Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து சென்ற போலீசார்…. சோதனையில் சிக்கிய 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், ஏட்டு செல்வகுமார் போன்றோர் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் லியோன் நகர் பகுதியில் சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும் விதமாக பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை கண்டனர்.

உடனடியாக காவல்துறையினர் அவற்றை சோதனை மேற்கொண்டபோது, அதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |