ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) என்பது ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான பணத்தை சேமிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இது மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை EPF கணக்கில் டெபாசிட்செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பான அமைப்பு ஆகும். EPF-அமைப்பில் பங்களிக்கும் பணியாளர்கள் வருடாந்திர வட்டிவிகிதத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. EPF பயனாளர்கள் தங்களது இருப்பை எந்நேரத்திலும் சரிபார்க்க பல்வேறு வழிகள் இருக்கிறது.
EPFO போர்ட்டல்
# முதலாவதாக EPFOன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான www.epfindia.gov.in க்குச் செல்ல வேண்டும்.
# அதன்பின் ஊழியர்கள் பிரிவின் கீழ் உறுப்பினர் பாஸ்புக் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தற்போது உங்கள் கடவுச் சொல் மற்றும் உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) உள்ளிட வேண்டும்.
# உங்களின் பிஎப் பாஸ்புக் விரைவில் திரையில் காட்டப்படும் நிலையில், இதன் வாயிலாக இப்போது உள்ள நிலுவையைப் பார்க்க இயலும்.
உமாங் செயலி
# உமாங் ஆப் வாயிலாக PF இருப்பை சரிபார்க்க இயலும். பல அரசாங்க சேவைகளை குடிமக்கள் எளிதாக அணுகுவதற்காக அரசாங்கம் உமாங்செயலியை வெளியிட்டது.
# முதலாவதாக உமாங் செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்யவும்.
# உங்களது போன் எண்ணைக் கொடுத்து ஒரு முறை மட்டுமே பதிவுசெய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும்.
# அடுத்ததாக உங்கள் உரிமை கோரல்களைக் கண்காணிக்க வேண்டும். உங்களது EPF பாஸ்புக்கை ஆய்வு மேற்கொள்ளவும் மற்றும் உரிமை கோரல்களைச் சமர்ப்பிக்கவும் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
SMS வாயிலாக PF கணக்கு இருப்பை அறிய
உங்களது UAN EPFOல் பதிவு செய்யப்பட்டு இருந்தால் நீங்கள் இபிஎப் இருப்பை எஸ்எம்எஸ் வாயிலாக எளிதாக அணுகமுடியும். 7738299899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் வாயிலாக உங்களின் மிகச் சமீபத்திய பங்களிப்பு மற்றும் PF இருப்பு பற்றிய தகவலைப் பெற முடியும். விபரங்களைப் பெற “EPFOHO UAN ENG” என்ற தலைப்பில் மேலேயுள்ள எண்ணுக்கு ஒருசெய்தியை அனுப்ப வேண்டும்.
மிஸ்டுகால் வாயிலாக இருப்பை அறிய
உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406ஐ டயல் செய்தால், நீங்கள் முன்பே UAN இணையத்தில் பதிவுசெய்து இருந்தால், பிஎப் கணக்கின் இருப்பை அறியமுடியும்.