Categories
மாநில செய்திகள்

நீங்க வேற லெவல்!…. விருது தொகையை திருப்பி கொடுத்த நல்லக்கண்ணு…. நெகிழ்ச்சி….!!!!

நாட்டின் 76வது சுதந்திரதினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சுதந்திரதின உரையாற்றிய அவர், தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது ஆகிய விருதுகளை வழங்கினார். இவற்றில் தகைசால் தமிழர் விருது தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் அடிப்படையில் சென்ற 2021 ஆம் வருடம் முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான தகைசால் தமிழர்விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் அவருக்கு விருதுக்கான சான்றிதழ் மற்றும் ரூபாய்.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அதன்பின் தான்பெற்ற ரூபாய்.10 லட்சம் பரிசுத் தொகையுடன் தன்னுடைய சொந்தநிதியான ரூபாய்.5,000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக நல்லக்கண்ணு, முதலமைச்சரின் நிவராணநிதிக்கு திருப்பியளித்தார். நமக்கு வேண்டுமெனில் இது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளிக்கக்கூடும். ஆனால் நல்லக் கண்ணுவிற்கு இது புதிதல்ல. அவருடைய 80வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி சார்பாக திரட்டிக் கொடுக்கப்பட்ட ரூபாய்.1 கோடியையும் அவர் கட்சிக்கே திருப்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |