Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டம்…. அழைப்பு விடுத்து வெளியான போஸ்டர்….

அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித் தனியே பிரிந்து இருக்கின்றனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாநகர் முழுதும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்துகொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க கட்சி தொடங்கிய 1972ம் வருடம் கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி, அதில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி இருக்கிறார்.

இந்த உரிமையை மீட்டெடுத்து இதயதெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான கழகத்தின் மூத்த உடன்பிறப்புகளும், கழகத்தின் முன்னோடிகளும், கழக உறுப்பினர்களும், தொண்டர்களும், இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் உண்மையான விசுவாசிகளும், தொண்டர்களும், தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும், ஜெயலலிதா பேரவை கழகத்தின் உறுப்பினர்களும், தொண்டர்களும் கழகத்தின் சட்ட விதிப்படி புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தவறாமல் பங்கேற்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் என அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் ஜானகியம்மாள் மற்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றோரின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இடைக் கால பொதுச் செயலாளராகவுள்ள எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் இப்போது இந்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அத்துடன் இந்த போஸ்டரால் சேலம் மாநகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |