தவறி விழுந்து 2-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள லிங்கநாயக்கன்அள்ளி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஷ்டிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிநாதன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் இவர்களது நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சஷ்டிநாதன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென நிலை தடுமாறி டிராக்டரில் உள்ள ஏர் கலப்பையில் தவறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த சஷ்டிநாதன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.