பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பாவாடை விழா நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரங்க வல்லநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எலி கடிக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சர்க்கரை பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். அதன் பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை நெய்க்குள தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.