Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர் தான் இறைச்சியை விற்பனை செய்தது…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட வனத்துறையினர்….!!!!

காட்டுப்பன்றி இறைச்சியை  விற்பனை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை  வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி வனத்துறை அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மணி  காட்டுப்பன்றி இறைச்சியை   விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும்  அவரிடம் இருந்த 7 கிலோ காட்டுப்பன்றி  இறைச்சியை  பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. வனத்துறையினர் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |