வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, பரதன் என்ற 2 பேர் விஜய் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் காவல்துறையினர் விஜய் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் விஜய்க்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரும் விஜயை சமாதானம் பேசுவதற்காக அழைத்துள்ளனர். அப்போது அவர்கள் விஜயை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவரின் சடலத்தை எரித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கான உத்தரவு நகல் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.