பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆட்சி இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் ஒருவர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் ஜாபர் கூறியுள்ளார். இந்த சூழலில் அவரை கொலை செய்ய கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என ஈரான் கூறி உள்ளது. மேலும் ஈரான் பின்புலமாக செயல்பட்டது என்ற செய்தியை ஈரான் மறுத்திருக்கிறது.