தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஆகஸ்ட் 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம்:
பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம்:
காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித் துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: ஸ்ரீ ராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்.
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, சிறுவாச்சூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமப் பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாப்புதூா், வேப்பந்தட்டை, பாலையூா், தொண்டப்பாடி, மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. பி. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
சிறுவாச்சூா் பகுதிகளில்…
இதேபோல, சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகா், பெரகம்பி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணாபுரம் பகுதிகளில்..
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா்பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பாலையூா், பெரிய வடகரை, வெண்பாலூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் எம். மாலதி தெரிவித்துள்ளாா்.
நெல்லை மாவட்டம்:
மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம்:
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம். ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
கரூர் மாவட்டம்:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, செல்லிவலசு, கருங்கல்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பள்ளப் பட்டி, அண்ணா நகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி. மோளை யாண்டிபட்டி, பெரிய சீத்தப்பட்டி, ரெங்கராஜ் நகர், சவுந்திராபுரம். லிங்கமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
கருங்கல்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட் ஆலமரத்துப் பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர். வல்லப்பம்பட்டி, சந் தைபேட்டை பண்ணப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். செல்லிவலசு, இனுங்கனூர், வெடிகாரன் பட்டி, தலையாரிபட்டி. மொடக்கூர், குரும் பப்பட்டி, பாறையூர். விராலிபட்டி, நவமரத் துப்பட்டி, புதுப்பட்டி. குறிகாரன்வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
அரவக்குறிச்சி (டவுன் ஏரியா), கொத்தம்பாளையம், கரடிபட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 16-ந் தேதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம்:
மதுரை மாவட்டம் தெப்பக்குளம், எஸ்.எஸ் காலணி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மோகன் அறிவித்துள்ளார்.
மின்தடைப் பகுதிகள்:
தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிஸ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் ஒன்று முதல் ஆறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ மற்றும் திருமகள் நகர் உள்ளிட்ட பகுதிகள்.
அனுப்பானடி மற்றும் தெப்பம் ஆகிய துணை மின் நிலையங்கள்:
மின் தடை பகுதிகள்:- ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.
எஸ்.எஸ்.காலனி துணை மின் நிலையம் இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யாநகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை காடன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், இ.பி. காலனி. வானமாமலைநகர், வேல்முருகன் நகர், துரைச்சாமி நகர், ராம் நகர், அருள் நகர், சிருங்கேரிநகர், பைபாஸ் ரோடு, அரிஸ்டோ மருத்துவமனை, சத்யமூர்த்தி நகர், வ.உ.சி தெரு, நேரு நகர், போடிலைன், கிரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட், ஜெய் நகர், தாணத்தவம் ரோடு, மீனாட்சி நகர், அனீஸ் கான்வென்ட், ராஜம் நகர், ராகவேந்திராநகர், எம்.எம். நகர் உள்ளிட்ட பகுதிகள்.