ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களை 2024இல் தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 4 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவது உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக இந்த கார் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வேகமான கார் இது என்றும் கூறப்படுகிறது.
இந்த கார் வருகின்ற 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நான்கு வினாடிக்குள் நூறு வரை வேகத்தை எட்ட கூடியது. இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட வேகமான காராக இது இருக்கும். முழு கண்ணாடி கூரையுடன் இது மூவ் ஓ எஸ் மற்றும் உலகின் மற்ற கார்களைப் போலவே சிறந்த ஓட்டுநர் திறன்களை கொண்டிருக்கும் என்றும் இந்த கார் சாவி மற்றும் கைப்பிடி இல்லாததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதனால இந்த கார் எப்போது வெளியாகும் என்று பலரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.