ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இவ்வாறு ஆதாரில் விவரங்களை மாற்றும் போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே விவரங்களை மாற்ற முடியும். இந்த OTP எண்ணை யாரிடம் பகிர கூடாது என்று மத்திய எச்சரித்துள்ளது. அதாவது ஓடிபி யை கேட்டு ஏதேனும் ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம்.
ஏனெனில் இதன் மூலம் மோசடி நடந்து வருவதால் OTP எண்ணை பகிர வேண்டாம். எப்போதும் UIDAI இணையதளத்தில் இருந்து மட்டுமே ஆதாரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் உங்களின் ஆதாரை யாரேனும் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க உங்களின் ஆதார் கார்டுகளைப் லாக் செய்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அன்லாக் செய்யவும். மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் 16 இலக்க விஐடி என்கிற விர்ச்சுவல் எண்ணை பயன்படுத்த வேண்டும் UIDAI அறிவுறுத்துகிறது .