Categories
மாநில செய்திகள்

இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு…. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு….!!!!

தமிழக பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும். இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இதன்படி முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் வரும் 20ம் தேதி துவங்க உள்ளது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5% இட ஒதுக்கீட்டிலும், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லூரிகள் எத்தனை, அங்கீகாரம் இழந்த கல்லூரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை, அரசு பள்ளியின், 7.5% இட ஒதுக்கீட்டுக்கான இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள், இன்று இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியால் வெளியிடப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக முன்கூட்டியே வைப்பு தொகை செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |