Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி..!

டெல்லியில் ஆம் ஆத்மி MLA -வின் பாதுகாப்பு வாகனம் மீது  நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆம் ஆத்மி  தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3வது முறையாக  ஆட்சி அமைக்கிறது.

சுரேஷ் யாதவ் என்பர் மெஹ்ராலி தொகுதியில் வெற்றி  பெற்று புதிய  எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருந்த சுரேஷ் யாதவ்  நேற்று  தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்பு  வழிபாடு முடித்துவிட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். 

டெல்லியின் தென்மேற்கில் கிஷன்கார் கிராமத்தில் வந்தபொழுது, மர்ம நபர்கள் சிலர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது 7 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் அசோக் மன் என்ற தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மேலும் மற்றொருவர் காயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |