சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் போன்று வடமேற்கு சீனாவின் கிங்காய் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.