Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை…. பிரதமர் மோடி அறிவிப்பு‌‌….!!!!

பிரதமர் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பிரதமர் பேசினார். அவர் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். இதனால் நாட்டுக்கு புதியதொரு வலிமை கிடைத்துள்ளது. இது மாதிரியான ஒரு வலிமை இருப்பது ஆகஸ்ட் 10 வரை எவருக்குமே தெரியாது. இந்தியாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் வேலு நாச்சியார், சுப்பிரமணிய சிவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், தீனதயாள் உபாத்யாயா, சியாமா பிரசாத் முகர்ஜி, வீர சவர்க்கார், அம்பேத்கர், நேதாஜி, படேல், நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள். இந்தியாவில் 5g அலைக்கற்றை சேவையானது விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் கிராமங்களிலும் டிஜிட்டல் இந்தியா என்ற கனவு நினைவாக போகிறது.

இந்த 5ஜி அலைக்கற்றை சேவையை 4 லட்சம் தொழில் முனைவோர்களால் கிராமங்களில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 8 வருடங்களில் டிஜிட்டல் பண பரிமாற்றம் மூலமாக 2 கோடி கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 40 லட்சம் பண பரிமாற்றங்கள் டிஜிட்டல் மூலமாக நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கடமை இருக்கிறது. அதை திட்டமிட்டு செய்தால் விரும்பிய பலன்களை அடையலாம் என்றார்.

Categories

Tech |