ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தலிபான்கள் துப்பாக்கி ஏந்தியும், வெள்ளை நிற பதாகை ஏந்தியும் ஒரு ஆண்டு நிறைவு பேரணி நடத்தினார்கள். ஆப்கான் தலைநகர் காபூலின் தெருக்களில் நடைபயணம், சைக்கிள்கள் மற்றும் பைக் வெற்றி அணிவகுப்புக்களை நடத்தினார்கள். அமெரிக்க தூதரகம் முன் இஸ்லாம் வாழ்க என்று கோஷமிட்டனர். மேலும் அமெரிக்காவிற்கு மரணம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். முதலாம் ஆண்டையொட்டி நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை பெருமைமிக்க நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு அனைத்தும் மாறியுள்ளது. தலிபான்கள் ஆட்சி செய்வதற்கும் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதற்காக திணறி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவானது பல லட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியிலும், பட்டினியிலும் தள்ளியுள்ளது. வௌிநாட்டு நிதியுதவிகள் வெகுவாக குறைந்துவிட்டன. மேலும் பெண்கள், பெண் கல்வி, பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.