Categories
தேசிய செய்திகள்

“எனக்கு யாருமே இல்லை”… விரக்தியில் விபரீத முடிவு…. அனாதையான குழந்தைகள்… பெரும் சோகம்…!!!!

துணைக்கு யாருமே இல்லாத காரணத்தினால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டியை  சேர்ந்த ரஞ்சிதா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகளுடன் வாழ்ந்து வருகின்றார். சிறுவயதிலேயே தாயை  இழந்த ரஞ்சிதா கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது தம்பியும், தந்தையும் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்றார்கள்.

இந்த சூழலில் துணைக்கு யாருமே இல்லாத விரக்தியில் இருந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு  மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் ரஞ்சிதாவின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகம் மரணம் இன்று வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு யாருமில்லை என்ற விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா தான் இறந்துவிட்ட பின் தனது இரண்டு மகள்களுக்கும் யாருமே இல்லை என்பதை நினைக்க மறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |