Categories
சினிமா

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட கரீனா கபூர்…. கேலி செய்யும் ரசிகர்கள்….!!!!

அமீர்கான் – கரீனா கபூர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய திரைப்படம் “லால் சிங் சத்தா”. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன் கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் லால் சிங் சத்தா படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் தொடர் கேள்விகளால் கோபமடைந்த அவர் ஒரு கட்டத்தில்,” உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்..?. நீங்கள் படம் பார்க்க வேண்டாம்.

நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகிவிடாது” என கூறினார். அவரின் இக்கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ரசிகர்கள் மத்தியிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதன் காரணமாக அதிர்ச்சியான கரீனாகபூர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவற்றில் “இப்படத்தை புறக்கணிக்காதீர்கள்.

2.5 ஆண்டுகளாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என தெரிவித்துள்ளார். இதனிடையில் கரீனாவின் இந்த இரு வேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர். மேலும் கரீனா வாயை கொடுத்து மாட்டிக் கொண்டார் என சக நடிகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கரீனாகபூர் செய்வதறியாது திகைத்து இருக்கிறார்.

Categories

Tech |