Categories
அரசியல் மாநில செய்திகள்

கொல கொலயா முந்திரிக்கா… சர்வாதிகாரத்தை காட்டுங்கள்… ஜெயக்குமாரின் முக்கிய கோரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 100% அளவிற்கு போதை பொருளை தடுக்க  தவறியது இந்த விடியாத அரசு. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்கி விடனும்.  அதுதான் ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் உடைய கடமை.

அப்போ அப்போ நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன், சர்வாதிகாரியாக மாறிவேண்டுவேன் என சொல்கிறார்.சர்வாதிகாரியாக மாறி ஏற்கனவே கட்சிக்காரர்கள் தப்பு செய்தார்கள், அப்போது நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டேன், நான் சர்வதிகாரியாக மாறிவிடுவேன் என்று சொன்னாரு.  அப்படி சர்வாதிகாரியாக மாறி பின்பும் கட்சிக்காரர்கள் தப்பு செய்யாமலா இருந்தார்கள் ?

இன்றைக்கும் திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு  ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது…  ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை,

இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து போன்ற விஷயங்கள் சர்வ சாதாரணமாக சர்வாதிகாரி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.சர்வதிகாரத்தை பொருத்தவரையில் ஒரு இரும்பு கரத்துடன் அடக்கி ஒடுக்க வேண்டியது…  சட்ட ஒழுங்கு யார் கையில் எடுத்துக் கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களிடம் காண்பிக்க வேண்டும். நிர்வாகத்தில் தப்பு செய்பவர்கள் மீது சர்வாதிகாரத்தை காமிக்க வேண்டும் என விமர்சித்தார்.

Categories

Tech |