Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கிய கர்ப்பிணி பெண் கூட்டு வன்கொடுமை வழக்கு….. 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…. தொடரும் எதிர்ப்பு….!!!

2002-ம் ஆண்டு குஜராத் கோத்ரா வன்முறையின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்தவ கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்தது. மேலும் பில்கிஸ் பானுவின் கைக்குழந்தை உள்பட அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்தது. இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 11 பேருக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆயள் கைதிகள் 11 பேரும் தண்டனையை குறைக்குமாறு முறையிட்ட போது இது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. தொடர்ந்து 11 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவதித்தாலும் குற்றத்தின் தன்மையை கருதியும் விடுதலை செய்யப்பட அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விடுதலை தொடர்பாக பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை விடுவித்தது நியாயம் கிடையாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |