செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி,மத்திய அரசு கொண்டு வந்த புதிய மின்சார திருத்தச் சட்டம் மூலம் இன்றைக்கு தனியார் வந்துவிட்டால், கொள்ளையடிக்க முடியாது, நீங்கள் தனியார் உற்பத்தி செய்தால் மட்டும் வாங்கிக் கொள்வீர்கள், ஆனால் விநியோகம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
முதலில் இது ஒரு தொழில், ஐந்து பேர் வந்து விட்டால் அவர்களுக்குள் போட்டி இருக்குமா ? இல்லையா? இதற்கு தான் ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது. அதற்கு தான் அரசு இருக்கிறது. இலவசத்தை அரசாங்கத்தை நிறுத்த சொல்லவில்லை, நாளைக்கு தனியார் தயாரித்தால் கூட, நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்துங்கள், அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் மீட்டர் போட வேண்டும் ? அதற்கு பயப்படுகிறார்கள், தனியாரிடம் சென்றால் கூட இலவச மின்சாரம் உறுதியாக கிடைக்கும்.
அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்ற நினைத்தால் கொடுத்தே தான் தீரும். டேஞ்சர் கோ என்பது ஒரு நிறுவனம். ஆனால் இலவசம் கொடுப்பது அரசு தானே, நாம் என்ன சொல்கிறோம் என்றால் ? நீங்கள் கொடுங்கள் ஆனால் பணத்தை டாங்கெட்கோ-க்கு கொடுக்கணுமா? வேண்டாமா? நீங்கள் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீர்கள். நீங்கள் ஒழுங்காக செய்யவில்லை என்பதனால் தான் ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருக்கிறது.
வருடா வருடம் 15 ஆயிரம் கோடி ஆகிறது, ஏன் அப்படி ஆகிறது. உங்களுடைய நிர்வாகம் சரியில்லை உங்களுடைய டிரான்ஸ்மிஷன்லையும், பகிர்மானத்திலும் எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது, அவர்களிடம் கணக்கு இல்லை. மின்சார வாரிய ஊழியர்கள் சொல்கிறார்கள், வரட்டும் தனியார் என்கிறார்கள்… அவர்கள் ஊழியர்கள் செய்தால் என்றால் தனியார் வந்தால் வேலை போய்விடும் என்று பயப்படுகிறார்கள். அது இயற்கையாக எல்லோருக்கும் இருக்க கூடிய ஒன்றுதான்.