Categories
மாநில செய்திகள்

ஏடிஎம்மில் நள்ளிரவில் நடைபெற்ற கொள்ளை முயற்சி….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..!!!

திருப்பூர் மாவட்ட பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றவர் முதியவர் என்று தெரியவந்தது. இதனையடுத்து அந்த முதியவரை பல்லடம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |