Categories
தேசிய செய்திகள்

உங்க மொபைல் நம்பர் மாத்திட்டீங்களே?….. அப்போ உடனே ஆதாரில் அப்டேட் பண்ணுங்க…. இதோ எளிய வழி…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் மொபைல் நம்பர் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் இருந்தால் தான் ஆதாரில் ஏதாவது அப்டேட் இருந்தால் அதனை எளிதில் செய்து முடிக்க முடியும். ஆதார் கார்டில் மொபைல் நம்பரை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் ask.uidai.gov.in என்ற வெப்சைட்டில் சென்று உங்களது மொபைல் நம்பரைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு ’send OTP’ கொடுக்க வேண்டும்.

மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ‘submit OTP & proceed’ கொடுக்க வேண்டும்.

பின்னர்  ‘Online Aadhaar Services’ என்ற டிராப் டவுன் மெனுவில் நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் வசதியை கிளிக் செய்து, மொபைல் நம்பர் அப்டேட்  கிளிக் செய்யவும்.

‘what do you want to update’ என்பதைத் தேர்வு செய்து தேவையான விவரங்களைப் பதிவிடவும்.

மொபைல் நம்பரை submit செய்தவுடன் புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட வேண்டியிருக்கும்.

இப்போது ஒரு OTP நம்பர் உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ‘save and proceed’ கொடுக்க வேண்டும்.

பின்னர் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்துக்கு ஆன்லைன் மூலமாக ஒரு அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய வேண்டும். அங்கே சென்று 25 ரூபாய் செலுத்தி மொபைல் நம்பரை அப்டேட் செய்யலாம்.

Categories

Tech |