கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபா அதே பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தீபா தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.