தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதரிடையே தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அதனால் பணிநீயமான அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமற்ற வருகின்றனர். தமிழக அரசு ஆசிரியர்கள் நலனை கருதி அரசு பல்வேறு சலுகைகளை கொண்டு வருகின்றது.
அதன்படி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக அரசுக்கு தெரிவிக்கும் விதமாக மின்னஞ்சல் முகவரிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,ஆசிரியப் பெருமக்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காக தான் ஆசிரியர் மனசு பெட்டி எனது வீட்டிலும் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.கடைக் கொடியில் இருக்கும் ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை எளிதில் தெரிவிக்கும் விதமாக [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.