சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேத்துரை ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின மூலம் புதிய குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குளம் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஹரி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேளாங்கண்ணி, நம்பி, துணை தலைவர் எஸ். தயாளன், ஊராட்சி செயலாளர் எஸ். குமாரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியுள்ளார்