சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை இயங்கி வருகின்றது. இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார்களை கேட்டு அறிந்தார். அப்போது வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்… எந்தவிதமான புகாருக்கு அளித்துள்ளீர்கள்… உங்கள் புகார் சரி செய்யப்பட்டு விட்டதா? என்று பேசி பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.