கல்வித்துறை சார்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கோவையில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு பொருப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம் விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.