ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் Activa மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான டீசரில் இது Activa 6ஜி மாடலின் புது வேரியண்ட் என தெரியவந்துள்ளது. இந்த புது வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் முன்புற அப்ரோன், பக்கவாட்டு பகுதிகளில் கோல்டன் நிற ஆக்டிவா மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள், டூயல் டோன் மிரர்கள், டூயல் டோன் சீட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் Activa 6ஜி மாடலில் 5.3 லிட்டர் பியூவல் டேன்க், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்டர், சீட் மற்றும் எக்ஸ்டெர்னல் பில்லர் மூடியை கழற்றும் டூயல் பன்ஷன் ஸ்விட்ச், எக்ஸ்டர்னல் பியூவல் பில்லர் கேப் ஆகியவை உள்ளது. புதிய பிரீமியம் வேரியண்டில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஹார்டுவேரை பொருத்தவரை புதிய Activa 6ஜி பிரீமியம் எடிஷனிலும், 7.68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட என்ஜினே வழங்கப்படும் என தெரிகிறது. இதனுடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுவதோடு, 12-10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோ ஷாக் யூனிட், இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.