கும்பகோணம் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சுவாமி மலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு சீனிவாச பெருமாள் கோயிலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
இங்கு இருந்த சீனிவாச பெருமாள் சிலைகள் ஒரு பத்மாவதி தாயார் சிலை மற்றும் வெள்ளியாலான பூஜை பொருட்களை கொள்ளையடிது உள்ளனர்.
பூட்டை உடைக்கும் போது கதவுகளில் இருக்கும் மணிகளின் சத்தம் கேட்டு விடக்கூடாது என்பதற்காக மணிகளின் உட்புறத்தில் மாவை தடவி கொள்ளையடித்து உள்ளனர்.
கொள்ளையடித்த சிலைகளுடன் மர்ம நபர்கள் அங்கிருந்த ஏணியில் ஏறி மதில் சுவரைக் கடந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.