லண்டனில் முதுகுப்பையுடன் Lin Guo என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1200 பவுண்டுகள் வைத்திருந்தார். அதனை தொடர்ந்து கிழக்கு லண்டனில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் 250,000 பவுண்டுகள் இருந்தது. அது மட்டுமில்லாமல் படுக்கைக்கருகில் இருந்த மேசை ஒன்றுக்குள் 6300 பவுண்டுகளும், பணம் எண்ணும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு இவர் சட்டவிரதமாக பணம் பரிமாற்றம் செய்பவர் என்பது தெரியவந்தது. அவர் வீட்டில் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து Lin Guoக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.