கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை மீனாட்சி மண் வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கியுள்ளார். செயலர் சோனி சஜி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜூவன் திட்டம் முழுமை பெறாமல் இருக்கின்றது. இதற்கான சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறப்பட்டுள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதற்கு இடையே வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை பதவிகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மேலும் நீலகிரியில் பட்டா வழங்குவதற்கு தடையாக இருக்கின்ற ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஊராட்சி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதில் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதுமலை ஊராட்சி குனில் சமுதாய கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் வனத்தின் கரையோரம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.