சிறுவனின் தொண்டைக்குள் பிளாஸ்டிக் பூ இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் Marley Enjakovic என்று 8 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கடந்த 5 வருடங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும் போதும் மட்டும்தான் இருமல் வந்துள்ளது. இதனால் சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தன்னுடைய மகனை அழைத்து சென்ற போது மருத்துவர்கள் ஆஸ்துமா இருப்பதாக சிறுவனுக்கு கூறியுள்ளனர்.
இந்நிலையில் திடீரென சிறுவனுக்கு இருமல் அதிகமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவர்கள் சோதனை செய்தபோது தொண்டையில் பிளாஸ்டிக் பூ சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் தொண்டையில் இருந்த பிளாஸ்டிக் பூவை அகற்றினர். இதனால் சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறார்.