புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் புதூரில் கூலி தொழிலாளியான மோகன்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மோகன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மோகன் குமரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மோகன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.