Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள்”…. கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேனி தொழிலாளர் உதவியாளர் தகவல்….!!!!!!

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அழிக்கப்பட்டதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா என உணவு நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் உதவியாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

மொத்தம் 73 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 55 நிறுவனங்களில் விடுமுறை அளிக்காத முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தின விடுமுறை போன்ற அரசு பொது விடுமுறை நாட்களில் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையோ அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்க தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |