2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூர் வடக்கு தெருவில் சுரேஷ், முத்துசாரதி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கனிபாண்டி, முத்து ஆகிய இருவருக்கும் இடையே ஒரு கொலை சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துவும், கனிபாண்டியும் இணைந்து சுரேஷ் மற்றும் முத்துசாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
இதனால் காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்து மற்றும் கணிப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.