மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பெருமாள் மணிமேகலையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மணிமேகலை தனது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று பெருமாள் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தனது மணிமேகலையிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிமேகலையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிமேகலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.