Categories
மாநில செய்திகள்

பாடப்பகுதிகளை தீடிரென நீக்குவது ஏன் ? உயர்நீதிமன்றம் கேள்வி …!!

சர்ச்சைகள் காரணமாக படபகுதியை தீடிரென நீக்குவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்து மகா சபாவும் , ஆர்எஸ்எஸ்சும் எடுத்தார்கள் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியை நீக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த , இந்து மகா சபையை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கு தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்த போது அந்த பகுதி நீக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு  வெளியாகியது.

இந்நிலையில் அந்த அறிவிப்பு சுற்றறிக்கை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரான வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடுத்தார். அதில் வரலாற்று நிகழ்வுகளை மாற்றி அமைக்க கூடாது என்றும் ,  வரலாற்றில் எந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்தாலும் அதை முழுமையாக பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டுமென்று தனது மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் வல்லுநர் குழுவால் உருவாக்கப்படட பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது , பாடத்திட்டத்தை நீக்குவது எதன் அடிப்படையில் , படபகுதியை நீக்கும் போது எந்த மாதிரியான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்றார்கள் என்ற வரலாறை படித்து கொண்டு தான் இருக்கிறோம். இந்தியா சீனா இடையே போர் நிகழ்ததையும் படித்து கொண்டு தான் இருக்கின்றோம்.  தற்போது சீனாவுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாமே வரலாறுதான் அதை நீக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.  இந்த விவகாரத்தை பொறுத்தவரை  பாடப்புத்தகத்தில் ஒரு பகுதியை நீக்கப்படும் போது எந்த மாதிரி நடைமுறை பின்பற்றப்படும் என்று உத்தரவிட்டு மார்ச் 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |